Friday, 18 August 2017

சுப்ரமண்ய புஜங்கம் 4


                                                              சுப்ரமண்ய புஜங்கம்   4

                                                                                                 

                      

                                                யதா ஸந்நிதானம் கதாமானவா மே

                                                பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ |

                                                இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே

                                                தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் ||

யதா’ ..............................................................................        எப்பொழுது, 

‘மானவா’ .............................................................................மனிதர்கள், 

‘மே ஸந்நிதானம் கதாஹா’,  .......................................என்னுடைய இந்த  
                                                                                                 சன்னதியை வந்து 
                                                                                                 அடைகிறார்களோ 
தே’........................................................................................ அந்த மனிதர்கள்,

‘ததைவ’ ............................................................................. அப்பொழுதே, 

‘பவாம்போதி பாரம் கதாஹா’.....சம்ஸாரம் என்னும்  சமுத்திரத்திலிருந்து                                  
                                   விடுபட்டு  அக்கரையை  அடைந்தவர்களாக ஆவார்கள்

    ‘இதி வ்யஞ்ஜயன்’..... ன்னு ஒரு விஷயத்தை புரிய வெச்சுண்டு  

                                                                                                   சூசனை பண்ணிண்டு                                                                                                                                                                                                                                                                                    

‘ஸிந்து தீரே’.....................................................................   இப்படி கடற்கரையிலே

 ‘ய ஆஸ்தே’......  எந்த பகவான்   இருக்காரோ, பூரண சான்னித்தியதோடு                                                                     விளங்குகிறாரோ,   இருக்காரோ,                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      
‘பவித்ரம்’ ..........................  ..............                                 மஹா பவித்ரமானவரும் 

‘பராசக்தி புத்ரம்’....பரா சக்தியின்பத்திரருமான் அந்த  ஸுப்ரமண்யரை                                                                                                           

 ‘ஈடே’  .....................  ..............  .........          நான் ஸ்தோத்ரம்   பண்றேன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

இந்த ஸ்லோகத்தை படித்தவுடன் தற்போது  ஞாபகத்திற்கு வரக்கூடிய திருப்புகழ்

நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது எனப் பல பேசி , அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி பெரியோர்களிடைக் கரவாகி 
நினைவால் நின் அடித் தொழில் பேணித் துதியாமல் 
தலையான உடற்பிணி ஊறி பவ நோயின் அலைப்பல வேகி
சலமான பயித்தமாகி தடுமாறி 
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தல மீதில் பிழைத்திடவே நின் அருள் தாராய் முருகா....

கலியாண சுபுத்திரனாக  குறமாது தனக்கு   விநோத கவினாரு புயத்தில்  உலாவி விளையாடி 
களிகூரும் உனை துணைத் தேடும் அடியேனை சுகப்படவே வை  முருகா..இது உனக்கு கடனாகும், மிக கனமாகும் முருகோனே...
பலகாலும உனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்  கூறி 
படி மீது துதித்துடன் வாழ அருள்வேளே
பதியான திருத்தணி மேவும் சிவலோகம் எனப்பரி வேறு 
பவரோக வைத்திய நாத பெருமாளே...
அருணகிரிநாதர் பார்வதி தேவியை,  சக்தியை கூறும் பொழுது பல அழகழகான நாமங்களை கூறி  தேவியின் குமார என குறிப்பிடுவதை நிறைய பாடல்களில் பார்க்கலாம்..

 கமலமாதுடன் என தொடங்கும் திருப்புகழில் பராசக்தியை எப்படியெல்லாம் அழைக்கிறார் என பார்ப்போம்..

1)குமரி, 2)காளி, 3)பயங்கரி, 4)சங்கரி, 5)கவுரி, 6)நீலி, 7)பரம்பரை, 8)அம்பிகை, 9)குடிலை, 10)யோகினி,11)சண்டினி, 12)குண்டலி, 13)எமதாயி,14)குறைவிலாள்,15)உமை 16)மந்தரி, 17)அந்தரி ,18)வெகு வித ஆகம சுந்தர

ஆதி சங்கரரை நினைத்தால் மஹா பெரியவாளின் உருவமோ அல்லது ஆதி சங்கரரின் சிலை உருவமோ அல்லது யாரோ வரைந்த வரைபடத்தின் உருவமோ தோன்றலாம்...

அருணகிரிநாதரை நினைத்தால் திருப்புகழ் வரிகளும் சந்தங்களும் போட்டோவில் உள்ள உருவங்களோ தோன்றலாம்..

ஆனால் ஆனால் நமது குருஜியை நினைத்தால் உருவத்தோடு உணர்வும் உண்டாகிறது  முருகா..அவரோடு பேசிய பேச்சுக்கள் நினைவில் தோன்றுகிறது.. குருஜியை நேரில்.பார்க்காத அன்பர்கள் கூட அவர் பாடிய ராகத்தை  திருப்புகழ் இசைவழிபாட்டின் மூலமாக பார்க்கிறார்கள்..
நம்மையெல்லாம் கரை சேர்க்க வேண்டும் என்று வாழ் நாட்கள் முழுவதும்  அக்கரையோடும் அன்போடும் வழிகாட்டுகினார்கள். தற்போதும் இசைவழி பாட்டின் மூலம் வழி காட்டுகிறார்கள்..

                                                           நிலையாத சமுத்திரமான பாடல் 


                                                                                     Utube  Link for ANDROID  and   IPAD   PHONE                             

                                                                      https://youtu.be/f5qkLMzCtOE     

                                                  முருகா சரணம்                                                                                  

Wednesday, 16 August 2017

அபிராமி அந்தாதி - 14 அபிராமி அந்தாதி - 14


                                                                        அபிராமி அந்தாதி - 14
                                                                                                     


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்;
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர்; சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண்ணளியே:


அன்பரின் விளக்கவுரை 

விண்ணுலகம் வாழும் தேவர்களும், அசுரர்களும் என்றும் உன்னை வணங்கியபடியே இருக்கின்றனர். கமலத்திலமர்ந்த வேதப்பரம்பொருள் நான்முகனும், அவதார நாயகன் நாராயணனும் என்றும் உன்னை சிந்தித்தபடியே இருக்கின்றனர். அழியாத ஆனந்தமளிக்கும் பரம்பொருள் சர்வேஸ்வரன் தனது தூய அன்பால் என்றும் உன்னைக் கட்டி போட்டபடி இருக்கின்றார். 

ஆனாலும் இவர்களைக் காட்டிலும் இந்த பூவுலகில் உம் திருவடி பணிவோர்க்கு மட்டும் என்றும் உன் கருணையும் அருளும் எளிதாகக் கிடைக்கின்றது. எம் தலைவியே இது மிகவும் வியப்பிற்குரிய ஒன்றாகும்.

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்" 

 பக்தர்க்குத் தண்ணளி வழங்கும் அபிராமியை, வானவர்களும், தானவர்களாகிய அசுரர்களும் வழிபடுகின்றார்கள். காச்சிப முனிவருக்குத் தநு என்னும் பெண்ணின் வழியாகத் தோன்றியவர்கள் அசுரர்களாகிய தானவ ர்கள்.வானவர்க்கு என்று ஒரு பண்பு உண்டு. தானவர்க்கு என்று ஒரு பண்பு உண்டு. அவ்வந்த பண்புகளாக ஆனவர்கள் என்பதால் வானவர், தானவர் ஆனவர்கள் என்றார் .

" சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே"
 சிந்தித்தல் என்பதற்கு மனனம் செய்தல் என்பது பொருள். திசைமுகர் என்னும் பிரம்மாவும், திருமாலும் தம் உள்ளத்துள் வைத்து சிந்தனை செய்கிறார்கள். 

"சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்" ;

 பரமசிவனார் மேற்கொண்ட யோக நெறியை இவ்வாறு குறித்தார் பக்தர். சிவன் தன் உள்ளத்தில் பார்வதியை யோகத்தால் பிணைப்பவர்: அதனால் பரம ஆனந்தம் பெற்றவர்ஆனார். ' பந்தித்தல் ' என்றால் கட்டுதல், பிணைத்தல், சேர்த்தல் என்று பொருள்; அம்மையைச் சிவபெருமான் தம் மனத்துள் பந்திக்கும் பரமானந்ந்தர் 'ஆகிறார்.எனவே அம்பிகையின் முதல் உபாசகர் சிவபெருமானே ஆவார்.

பிரமதேவர் தன் த்யானமூர்த்தி வந்துவிட்டாள் என்று குழைத்து வணங்குகிறார். நாராயணரோ அவள் அருளுக்கு ஏங்கி நிற்கிறார். சிவபெருமான் அவளுடைய அந்தரங்கத்தை நாடித் தவம் கடக்கிறார். வானவர் ணங்குகின்றார்கள். தானவர் வந்திருக்கின்றனர். " வந்தடி போற்றுவர் வானவர் தானவர்" ( திருமந்திரம் 1242)
லலிதா ஸஹஸ்ரநாமத்துல 64. தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா.
தேவர்கள், ரிஷிகள் இவர்களுடைய கூட்டங்களால் ஸ்தோத்ரம் செய்யப்பட்ட வைபவத்தோடு கூடியவள். 297. ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா - விஷ்ணு, ப்ரம்மா, இந்திரன்முதலியவர்களால் வணங்கப்பட்டவள்.
ஸ்ரீ லலிதா த்ரீசதியில்

105. ஹராராத்யா - சிவனால் ஆராதிக்கப்பட்டவள்.
106. ஹரிப்ரமேந்த்ர வந்திதா - ஹரியாலும் பிரம்மா வினாலும், இந்திரனாலும் பூஜீக்கப்பட்டவள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.


குமரகுருபர முனிவரும், " எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே!" என்று பாடுகிறார்.


ஆதிசங்கரரும், ஸௌந்தர்ய லஹரீயில் " முகுந்தப்ரஹ்மேந்த்ர" ( 22) " தநீயாம்ஸம் பாம்ஸும் " ( 2 ) என்ற ஸ்லோகங்களில் இந்த கருத்தினை தெரிவிக்கிறார்.
869. ஷிப்ர ப்ராதினீ - சீக்கிரமே அனுக்ரஹம் செய்பவள்.
992. அவ்யாஜ கருணாமூர்த்தி - பஷபாதமில்லாத கருணை உருவம்.

பாரில் உன்னைச்சந்திப்பவர்க்கு எளிதாம் 
 இந்தப்பாரில் தன்னை சந்தித்துத் தரிசனம் செய்யும் அடியவர்களுக்கு எளியவளாக இருந்து தண்ணளி செய்கிறாள். என்னே அவள் கருணை.
அன்னையின் கருணையைக் கண்ட அடியார்கள். கருணாதரங்கிதாஷிம், கருணாரஸஸாகரா, கருணாம்ருத ஸாகரா, காருண்ய விக்ரஹா என்கிறார்கள்.
590. கடாஷகிங்கரீ பூத கமலா கோடி ஸேவிதா

அந்த அம்பாளின் கடைக்கண் பார்வை ஒரு பக்தன் மேல் விழுந்து விட்டால், கோடிக்கணக்கான லஷ்மிகளும் அவனுக்குப் பணிவிடை செய்து விடுவார்கள். எல்லா ஸௌபாக்யங்களையும் அவன் பெறுவான் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. 


அம்பாளுடைய கடாஷத்தின் மஹிமை மூக பஞ்ச சதியில் கடாஷ சதகத்தில் காவ்யரஸனையுடன் சொல்லப்படுகின்றது.

'ஆபால கோபல விதிதாதைய நம:' என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. குழந்தை உள்ளத்துடன் தன்னைத் தேடும் பக்தர்களுக்கு அம்பிகை உடனே அருள்புரிவாள் என்பது இதன் பொருள். அம்பாளைக் காண பெரிய வழிபாடுகளோ, தவமோ, யோகமோ தேவையில்லை. பூரண சரணாகதி ஒன்றே போதும்.

அம்பிகையே எளிமையானவள்: சௌலப்பியம் மிக்கவள்: எளியவர்க்கும்எளியவள்: யார் கோவிலுக்குச் சென்று அவளது அர்ச்சாமூர்த்தைத்தை வணங்கினாலும், ' எளிதாகும் தண்ணளி' யாள் அவள்,   


                                                           பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


                                                                                                                                                                 Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                             https://youtu.be/WsfUP8xwTF8                                                                                                                 


                                                      Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                            https://youtu.be/Hs1rnVOhqk0                                                                             முருகா சரணம்                                                        

Sunday, 13 August 2017

சுப்ரமண்ய புஜங்கம் 3                                                              சுப்ரமண்ய புஜங்கம்   3
                                                                                                                                                                                                       
                                                                                               

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்

மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம் |

மஹீதேவதேவம் மஹாவேத பாவம்

மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் ||


அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை 

மயூரம் -.................................................. மயில்.. 
  
அதிரூடம் .............................................. ஏறி அமர்ந்து இருக்கிறார்.

மஹா வாக்ய கூடம்......நான்கு வேதங்களிலும் உள்ள மஹா வாக்கியங்கள். பெருத்த     வசனங்கள்                                                                                                                                                                                                                                                                                                                                               
1) பரக்ஞானம் ப்ரம்மா
2) அயமாத்மா ப்ரம்மா
3) தத்வமஸி
4)அஹம் ப்ரம்மாஸ்மி
என்பனவற்றின் பொருளாக விளங்குபவன் சுப்ரமண்யன்.

மனோஹாரி தேஹம்--- மனதை கொள்ளை கொள்ளும் அழகுடையவன் முருகன்.
மஹத்சித்த கேஹம் ......மஹான்களுடைய சித்தத்தை வீடாக கொண்டு  இருப்பவன் 

மஹீ தேவதேவம் -- .......பூமியில் இருக்கக்கூடிய தேவர்களுக்கு தெய்வம்.

மஹா வேத பாவம்  --... நான்கு வேதங்களின் தாத்பர்யம் முருகன்தான்.

மஹாதேவ பாலம்    ---- மஹா தேவனான சிவனின் பாலன். சிவகுமாரன்.

லோக பாலம்   ---............ உலகங்களையெல்லாம் காப்பவர் முருகன்தான்..

பஜே................................... இந்த ஸ்வாமியை நான் வழி படுகிறேன் 

மயூரம் மயில் என்றவுடன் அருணகிரிநாதர் எப்படியெல்லாம் தரிசித்து இருக்கிறார் என்பதை நினைக்கும்போதே மனதை என்னவோ செய்கிறது..

கந்தரலங்காரத்தில் 11 வது பாடலில் 

குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக் கசையிடு வாசி விசை கொண்ட வாகனப்பீலியின் கொத்து அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியிட எண்திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர் பட்டதே...

முருகன் மயிலின் மீது ஏறி அமர்ந்து கசையிட விசை கொண்டு செல்கிறது மயில் வாகனம்.. அப்படி செல்லும்போது மயில் தோகை அசைந்ததால் ஏற்பட்ட காற்றால் மேரு மலை அசைந்ததாம்...ஒரு அடி எடுத்து வைக்க எட்டு திசைகளிலும் தூள் பரந்ததாம்..அந்த தூள் கடலில் விழுந்ததால் கடலில் ஓர் திட்டே தோன்றி விட்டதாம்..அப்பேர் பட்ட மயில் ...

வேதமே மயிலாக வந்து முருகனை தாங்கி ரொம்ப சந்தோஷப்பட்டதாம்..

கந்தர் அநுபூதியில் மூன்று பாடல்களில் மயில் வாகனனாக அருள்பாலிக்கிறார்.

1.வரதா முருகா! மயில் வாகனனே..

2) வாழ்வாய்  இனி நீ  மயில் வாகனனே!

3.வாகா! முருகா மயில் வாகனனே! .

 வங்கார மார்பிலணி எனத்தொடங்கும் பாடலில் "சிங்கார ரூப மயில் வாகன நமோ நம" என 

ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகினேறி லோகங்கள் வலமதாட அருள்தாராய் முருகா...


குருஜியின் குரலில் மயில் வகுப்பு கேட்போமே 


                                                                                                               

                                                         Utube  Link for ANDROID  and   IPAD   PHONE                                                                 https://youtu.be/P6TLsMa4Slg

                                                                           முருகா சரணம் 

Friday, 11 August 2017

அருணகிரிநாதர் நிணைவு விழா 2017


                                            அருணகிரிநாதர் நிணைவு விழா  2017

                                                                            


      மும்பையில் இசை வழிபாடு                         

வழக்கம் போல் இந்த ஆண்டு 15.8.17 செவ்வாய்  கிழமை அன்று திருசெம்பூர் திருமுருகன் திருக்கோவில் மண்டபத்தில்  காலை 7.30 மணி அளவில் பூஜையுடன் தொடங்கி 108 திருப்புகழ் பாடல்களுடன் இசை வழிபாடு நடை பெற உள்ளது அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

 அழைப்பிதழ் கீழே:      
                                                                                

                     சென்ற ஆண்டு விழாவில் அருளாளர் கோபாலகிருஷ்ணன்                                        கைவண்ணத்தில் எழுந்தருளிய பெருமான்
                                                                                           

                           
                                                                                                     


கோபாலகிருஷ்ணணன்கைவண்ணத்தில்விதவிதமான கோலத்தில்  காட்சி

அளிக்கும்பெருமான்இந்தஆண்டுஎப்படிகாட்சிஅளிப்பார் என்பது


அன்பர்களின் அவா 

கோபாலகிருஷ்ணனின் கடந்த ஆண்டுகளின் படைப்புகளை 

கீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்.

Sunday, 6 August 2017

சுப்ரமண்ய புஜங்கம் 2                                                              சுப்ரமண்ய புஜங்கம்   2

                                                                                                   

                                                                                           


ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||

அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை 

‘ந ஜானாமி சப்தம்’ 
எனக்கு ஒரு பதத்தைக் கூட சரியான பொருள் தெரிஞ்சு பேச தெரியாது

 ‘ந ஜானாமி சார்த்தம்’
இது இன்ன அர்த்தம்-ன்னு தெரியாது. 

‘ந ஜானாமி பத்யம்’ 
எனக்கு ஒரு கவிதை எழுதறதுக்கும் தெரியாது.

ந ஜானாமி கத்யம்
எனக்கு உரைநடையான கட்டுரையும் எழுத தெரியாது...

ஆனால் என்னுடைய மனசுல, 

‘மே ஹ்ருதி’
என்னுடைய ஹ்ருதயத்தில், 

‘சிதேகா ஷடாஸ்யா’ 
ஒரு ஆறுமுகங்களோடு கூடின ஒரு ‘சித்’, ஒரு ஒளி, 

‘த்யோததே’
பிரகாசிக்கறது. ஆறுமுகங்களோடு கூடின ஒரு ஒளி, ரொம்ப நிகரற்ற 
ஒரு தேஜஸோட என் மனசுல பிரகாசிக்கறது. 

(அதனால) ‘முகாத்’ 
என்னுடைய முகத்தில்  இருந்து, என்னுடைய வாக்கில் இருந்து

‘கிரஸ்சாபி சித்ரம்’ 
ரொம்ப ஆஸ்ச்சரியமான வார்த்தைகள் எல்லாம்

‘நிஸ்ஸரந்தே’ 
வெளியில வந்து அருவி மாதிரி கொட்டறது”, அப்படீன்னு சொல்றார்..

"எனக்கு எழுத்து தெரியாது , வார்த்தைகள் தெரியாது, பொருள் உணர்ந்து எழுத தெரியாது, கவிதை எழுத தெரியாது, கட்டுரை எழுத தெரியாது "


சொல்பவர் யார்...?

ஆதி சங்கரர் 

"ஷண் மதங்களை ஸ்தாபனம் செய்து அது இன்று வரை தொடர்ந்து  நடைபெற செய்தவர்..சௌந்தர்யலஹரி, சிவானந்த லஹரி, கணேசபஞ்ச ரத்னம், ரங்கநாதாஷ்டகம், உபநிஷத்துக்கு பாஷ்யம் எழுதியவர்., ஆத்ம போதம், விவேக சூடாமணி போன்ற வேதாந்த நூல்களை எழுதியவர்..தமது 32 வயதிற்குள்ளாகவேபாரத தேசம் முழுதும் பாத யாத்திரை சென்று அத்வைதத்தை போதித்தவர். " 

நாமெல்லாம் எம்மாத்திரம்?

ஆனால்  அவரே 

"என்னுடைய ஹ்ருதயத்தில்,ஒரு ஆறுமுகங்களோடு கூடின ஒரு ‘சித்’, ஒரு ஒளி, ஆறுமுகங்களோடு கூடின ஒரு ஒளி, ரொம்ப நிகரற்ற 
ஒரு தேஜஸோட என் மனசுல பிரகாசிக்கறது. என்னுடைய வாக்கில் இருந்து, முகத்தில் இருந்து, அதனால் என்னுடைய வாக்கில்  ரொம்ப ஆஸ்ச்சரியமான வார்த்தைகள் எல்லாம்
வெளியில வந்து அருவி மாதிரி கொட்டறது” என்றும் பகிர்கிறார்.

அது தான் நம் முருகப் பெருமானின் பேரருள். மாபெரும் தத்துவம்.நம்மை ஆட்டுவிப்பது இறைவன் தான் .அவனை சரணடைவதைத் தவிர வேறு மார்கமில்லை.

அருணகிரிநாதர் கூறுகிறார் 

ஏடு எழுதா முழு ஏழையை, மோழையை என்கிறார்
ஏது புத்தி ஐயா என்கிறார்.
படிக்கின்றிலை பழநி திருநாமம் என்கிறார்..

"திடமிலி " என்று தொடங்கும் மற்றொரு பாடலில் 

 "உன் அருளில் ஈடுபடும் உறுதி இல்லாதவன் யான்,நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவன் யான்,தொண்டுகள் செய்வதற்கு ஆற்றல் இல்லாதவன் யான்,
வியக்கத் தக்க  அரும் செயலைச்செய்யாதவன் யான்,மெய்யறிவோடு கூடிய தவம் ஒன்றும் செய்யாதவன்யான்,நன்மையை நல்கும் ஜபம் ஏதும் செய்யாதவன் யான்,சொர்க்க உலகத்தில் இடம்பெறத் தகுதிஇல்லாதவன் யான்,கரங்களால் ஒரு தானமும் கொடுத்தறியாதவன்யான்,நற்றமிழில்    நல்லதமிழ்ப்பாடலால் பாடுதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன்
இத்கைய குறைபாடுகள் உள்ள அடியேன் உனது இரண்டு திருவடிகளையும் அடைந்துநல் வினை , தீவினை ஆகிய இருவினைகளும்தீர்ந்து. உயர்ந்த முக்தி நிலையைப் பெற்றுஉய்ய வேண்டும்."

என்று வேண்டுகிறார்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று ஓளவையார் ஓர் ஒப்புமை கூறி கல்லாத அளவை அளவிட்டு கூறுகிறார்...

நம் குருஜி  "திருப்புகழ் பாடல்களை இசையுடன் அமைத்துக் கொடுத்தது ,அன்பர்திருக் கூட்டத்தைஅமைத்துக்கொடுத்ததுஎல்லாம்  செந்திலாண்டவன்தான்.தான் இல்லை" என்று கூறுவார்.

வழிபாடுகளில்நாம்  இசைக்கும் போது  அதை முற்றிலும் உணர்ந்து அவர் வழி நடந்து வருகிறோம்.

புஜங்கம்  அனுராதா கிருஷ்ணமூர்த்தியின்  குரலில்                                முருகா சரணம் 

Saturday, 5 August 2017

ஆடி வெள்ளி


                                                                                         ஆடி வெள்ளி

                                                                                                     
                       

வழக்கம்போல் நம் அமைப்பின் ஆடி வெள்ளி விழா 11.8.2017 அன்று

மாலை  4 மணி அளவில் செம்பூர் அஹோபிலமடம் வளாகத்தில்  லலிதா

சஹாஸ்ரநாமம்  அர்ச்சனை தொடங்கி தேவியைப் போற்றும் துர்கா 

சந்திர கலா ஸ்துதி,அபிராமி அந்தாதி,பதிகம்,திருப்புகழ் பாடல்களுடன் 

நடைபெற உள்ளது. அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு அபிராமி 

அன்னையின் அருள் பெற வேண்டுகிறோம் 
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது 


                                                             
                                                                               

                                                                              அபிராமி அன்னையே சரணம் 

                                                                                                 முருகா சரணம்