• இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம் 5 நந்தி , 5 தேர்  5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
  • இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
  • காசியை விட ஒரு படிபுண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.

  • பிற தகவல்கள்

  • இக்கோயிலிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியு சவுத் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதுபல கட்ட விசாரணைகள் மற்றும் முயற்சிகளுக்குப்பின் ஆஸ்த்திரேலிய பிரதமர் டோனி அபாட்(Tony Abbot) அவர்களின் 2014 இந்திய வருகையின் போது இச்சிலை இந்தியாவிடம் ஓப்படைக்கப்பட்டது.
பாடல் வரிசை எ ண்   18                            புத்தக வரிசை எண்  311
ராகம்  ரேவதி         தாளம்   ஆதி           கண்ட நடை