Friday 13 November 2015

குரு மகிமை இசை ராகமாலிகை




                                                   குரு மகிமை  இசை  ராகமாலிகை பாடல்கள் 


                                                 " சருவி இகழ்ந்து "என்று தொடங்கும் பாடல் 



                                                           பெருத்த வசன வகுப்பு 


                                                                                                                                                   

                                                                     மயில் வகுப்பு 



                                                                                     

                                ஊனாருமுட்பிணியும்  என்று தொடங்கும் பாடல் 

                                                திருவாடானை திருத்தலம்

 இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளியில் இருந்து தென்கிழக்காக ஏறத்தாழ 125 கி.மீ. தொலைவிலும் இராமநாதபுரம் நகரில் இருந்து வடக்கே 53 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

காரைக்குடியிலிருந்து தொலைவில் உள்ள தேவகோட்டைவந்து திருவாடனைவரவேண்டும்.

இந்த ஊரின் சங்ககாலப் பெயர் அட்டவாயில்.

சொற்பிறப்பியல்: திரு+ஆடு+ஆனை திரு, 

சொற்பொருளியல்: மேன்மை, தெய்வீகம் மற்றும் ஆடு +ஆனை(யானை) திரிந்து திருவாடானை ஆகியது.

பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை 

வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலத்து சிவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார். ஊரும் அதே பெயரில் அழைக்கபடலாயிற்று.

இறைவன் - ஆதிரத்னேஸ்வரர், அஜகஜேஸ்வரர்.

இறைவி - சிநேகல்லி, அன்பாயிரவல்லி.

தலமரம் - வில்வம்.

தீர்த்தமக்ஷீரகுண்டம்,வருணதீர்த்தம் ,அகத்தியதீர்த்தம்,சூரியதீரத்தம் 
மார்க்கண்டேயதீர்த்தம் முதலானவை.

சம்பந்தர் பாடல் பெற்ற தலம்

இத்தலத்தின் வேறு பெயர்கள் - பாரிஜாதவனம், வன்னிவனம், வில்வவனம், ஆதிரத்னேஸ்வரம், மார்க்கண்டேயபுரம், கோமுத்தீசம், விஜயேச்சரம் என 12 பெயர்கள் சொல்லப்படுகின்றன.
இத்திருக்கோயிலின் கோபுரம் மிகமிக உயரமானது. மநு, மாந்ததா, அர்ச்சுனன், வருணன், காமதேனு சூரியன், அகத்தியர் வாருணி முதலியோர் வழிபட்ட சிறப்புடையது. 

                                                           கோபுர தரிசனம் 


                                                                                   

      முருகா சரணம்                                                                                

1 comment:

  1. ரம்மியமான ராகமாலிகைப் பாடல்கள்! திருவாடானை திருத்தலம் குறித்த அரிய செய்திகள்!

    ReplyDelete