Friday 29 July 2016

குருமஹிமை ...இசை... ஆனந்த பைரவி ராகம் பகுதி 2


                                     குருமஹிமை ...இசை... ஆனந்த பைரவி  ராகம்  பகுதி  2

                                         "சரவணா ஜாதா"   என்று தொடங்கும் பாடல்



                                                                பிள்ளையார் பட்டி திருத்தலம் 



பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில்தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில்அமைந்துள்ளது.
பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்-குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள குடைவரைக் கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்குன்றக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது.
  • இங்கு இருப்பவர் வலம் சுழி விநாயகர்.
  • 6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.
  • இரண்டு கைகள் கொண்ட விநாயகர்
  • மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.
  • குடவரைக் கோயில்.
  • தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான்.


குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில்.
பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது.
இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.

மேலும் தகவல்களுக்கு 




                                                                                                             
                                                                                                           

                                  "தெருவினில் நடவா மடவார்' என்று தொடங்கும் பாடல்


                                                                    சுவாமிமலை திருத்தலம் 


 
                                             "வாலவயதாகி "  என்று தொடங்கும் பாடல்

             ராமேஸ்வரம்  திருத்தலம் 


       
                                                'எனை யடைந்த " என்று தொடங்கும் பாடல் 

                                                                   திருத்தணிகை திருத்தலம் 


                                                                                                                                                                   

                                                                           தவள ரூப  என்ற பாடல்  

                                                                   திருச்சிராப்பள்ளி திருத்தலம் 


                                                                                                       


                                                           ஆனந்த பைரவி ராகம் தொடரும் 


                                                                                       முருகா சரணம்                                 

1 comment:

  1. அமுத பானமாக ஆனந்த பைரவி ராகப்பாடல்கள்!

    ReplyDelete