Sunday 13 August 2017

சுப்ரமண்ய புஜங்கம் 3



                                                              சுப்ரமண்ய புஜங்கம்   3
                                                                                                                                                                                                       
                                                                                               





மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்

மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம் |

மஹீதேவதேவம் மஹாவேத பாவம்

மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் ||


அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை 

மயூரம் -.................................................. மயில்.. 
  
அதிரூடம் .............................................. ஏறி அமர்ந்து இருக்கிறார்.

மஹா வாக்ய கூடம்......நான்கு வேதங்களிலும் உள்ள மஹா வாக்கியங்கள். பெருத்த     வசனங்கள்                                                                                                                                                                                                                                                                                                                                               
1) பரக்ஞானம் ப்ரம்மா
2) அயமாத்மா ப்ரம்மா
3) தத்வமஸி
4)அஹம் ப்ரம்மாஸ்மி
என்பனவற்றின் பொருளாக விளங்குபவன் சுப்ரமண்யன்.

மனோஹாரி தேஹம்--- மனதை கொள்ளை கொள்ளும் அழகுடையவன் முருகன்.
மஹத்சித்த கேஹம் ......மஹான்களுடைய சித்தத்தை வீடாக கொண்டு  இருப்பவன் 

மஹீ தேவதேவம் -- .......பூமியில் இருக்கக்கூடிய தேவர்களுக்கு தெய்வம்.

மஹா வேத பாவம்  --... நான்கு வேதங்களின் தாத்பர்யம் முருகன்தான்.

மஹாதேவ பாலம்    ---- மஹா தேவனான சிவனின் பாலன். சிவகுமாரன்.

லோக பாலம்   ---............ உலகங்களையெல்லாம் காப்பவர் முருகன்தான்..

பஜே................................... இந்த ஸ்வாமியை நான் வழி படுகிறேன் 

மயூரம் மயில் என்றவுடன் அருணகிரிநாதர் எப்படியெல்லாம் தரிசித்து இருக்கிறார் என்பதை நினைக்கும்போதே மனதை என்னவோ செய்கிறது..

கந்தரலங்காரத்தில் 11 வது பாடலில் 

குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக் கசையிடு வாசி விசை கொண்ட வாகனப்பீலியின் கொத்து அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு அடியிட எண்திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர் பட்டதே...

முருகன் மயிலின் மீது ஏறி அமர்ந்து கசையிட விசை கொண்டு செல்கிறது மயில் வாகனம்.. அப்படி செல்லும்போது மயில் தோகை அசைந்ததால் ஏற்பட்ட காற்றால் மேரு மலை அசைந்ததாம்...ஒரு அடி எடுத்து வைக்க எட்டு திசைகளிலும் தூள் பரந்ததாம்..அந்த தூள் கடலில் விழுந்ததால் கடலில் ஓர் திட்டே தோன்றி விட்டதாம்..அப்பேர் பட்ட மயில் ...

வேதமே மயிலாக வந்து முருகனை தாங்கி ரொம்ப சந்தோஷப்பட்டதாம்..

கந்தர் அநுபூதியில் மூன்று பாடல்களில் மயில் வாகனனாக அருள்பாலிக்கிறார்.

1.வரதா முருகா! மயில் வாகனனே..

2) வாழ்வாய்  இனி நீ  மயில் வாகனனே!

3.வாகா! முருகா மயில் வாகனனே! .

 வங்கார மார்பிலணி எனத்தொடங்கும் பாடலில் "சிங்கார ரூப மயில் வாகன நமோ நம" என 

ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகினேறி லோகங்கள் வலமதாட அருள்தாராய் முருகா...


குருஜியின் குரலில் மயில் வகுப்பு கேட்போமே 






                                                                                                               

                                                         Utube  Link for ANDROID  and   IPAD   PHONE



                                                                 https://youtu.be/P6TLsMa4Slg

                                                                           முருகா சரணம் 

No comments:

Post a Comment