Wednesday 11 October 2017

சுப்ரமண்ய புஜங்கம் ...9


                                                               சுப்ரமண்ய  புஜங்கம் ...9
                                                                                                     





ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே

மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே |

மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே ||


அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 

இன்று சுப்ரமண்ய புஜங்கத்தின் ஒன்பதாவது ஸ்லோகத்தை பார்ப்பதற்கு முன்பு சில சிந்தனை துளிகள்..

இதுவரை சுப்ரமண்ய புஜங்கத்தில் செந்தில் நகரையும், கடற்கரையையும், கடல் அலைகளையும், கயிலைமலையனைய செந்திலம்பதி யையும், வள்ளி குகையில் குகன் இருக்கும் கந்தசைலம், அவனது ஔி சுயமாக தோன்றும் ஆயிரம் சூரியர்கள் சேரந்தால்  உண்டாகும் ஔி, பள்ளியறை வர்ணணை , மாணிக்க கட்டில், பாரிஜாத மலர்கள் போன்ற ரொம்ப வாசனை உடைய பூக்களால் ஆன அலங்காரம் இவற்றை தரிசித்தால் உண்டாகும் நன்மையை கூறினார்...

இப்போதிருந்து ரூப வர்ணணை...பாதாதி கேசம் வர்ணணை..நேரில் வந்து காட்சி கொடுத்ததை கூறுதல், நேரில் காட்சி கொடுத்தவுடன் வேண்டும் வரங்கள் , நமஸ்காரங்கள், ஜய ஜய ஸ்லோகம் மற்றும் இந்த ஸ்லோகங்களை கூறுவதால், படிப்பதால்., ஜபிப்பதால் ஏற்படும் பலஸ்ருதி என பகவத் பாதாள் இந்த சுப்ரமண்ய புஜங்கத்தை புகல்கிறார்..புகற்றுகிறார்..

அருணகிரிநாதர் பல திருப்புகழ் பாடல்களில் இதேபோல் கட்டமைத்து இருப்பார்..  முதலில் பாதத்தை வர்ணிக்க போகிறார்..குருஜி அடிக்கடி கூறுவார்கள் திருப்புகழ் இசைவழிபாட்டிலே  நம் மனது அவனது பாதார விந்தங்களில்தான் போய் விழ வேண்டும் வேறொரு சிந்தனையும் இருக்க கூடாது..எனவே நமது மனதை ஒருமுக படுத்த ஓர் கற்பனை..குருஜி தற்போது முருகனது பாதார விந்தங்களில்  இன்னிசை பாடிக் கொண்டிருப்பார்கள் என கற்பனை செய்து கொண்டு ஸ்லோகத்தை பார்ப்போம்.

.‘ரணத்தம்ஸகே’

 ஹம்ச பக்ஷிகள் சப்தம் பண்ணிண்டு இருக்கு. 
ஸுப்பிரமண்ய ஸ்வாமியினுடைய பாதங்களை தாமரை பூக்களாக வர்ணிக்கறார். தாமரை பூக்களை சுற்றி ஹம்ஸ பக்ஷிகள் இருக்கும். தாமரைப்பூவில் தேன் இருக்கும். அதெல்லாம் கொண்டு முருகனுடைய பாதாரவிந்தத்தை வர்ணிக்கிறார். தாமரைப்பூ செக்கச் செவேல்னு இருக்கும். 

‘மஞ்சுளே’ 

மஞ்சுளேன்னா ரொம்ப அழகானதுன்னு அர்த்தம்.

 ‘அத்யந்த சோணே’ 

நல்ல செக்கச் செவேல்னு இருக்கக் கூடியதாகவும், ஒரு தாமரைன்னா அதுல தேன் இருக்குமே. இதுல என்ன தேன்? 

‘மனோஹாரி லாவண்ய பீயூஷ பூர்ணே’

 மனதை கொள்ளை கொள்ளும் லாவண்யம்ங்கிற தேன் நிரம்பியிருக்கு.

 ‘தே பாதபத்மே’

 உன்னுடைய பாதங்களில் 

‘பவக்லேச தப்த:’ 

சம்சாரத்தில் தவித்து கொண்டிருக்கும் என்னுடைய

 ‘மே மனஷ்ஷட்பத:

’ மனமாகிய வண்டு ‘ஹே! ஸ்கந்த’ 

‘ஸதா’

 எப்பொழுதும் 

‘மோததாம்’ 
உன்னுடைய பாத பத்மங்களில் என்னுடைய மனமாகிய வண்டு எப்பொழுதும் ரமித்துக் கொண்டே இருக்கட்டும்னு, கேட்கறார்.

இந்த மனசுக்கு ஆறு குணங்கள் ஷமம் , தமம் , திதிக்ஷை, உபரதி, ஸ்ரத்தா, சமாதானம் என்கிற ஆறு குணங்கள் இருக்கறதுனால ஷட்பதி. ஷட்பதிங்கிறதுக்கு ஆறு கால்கள் கொண்ட வண்டுன்னு ஒரு அர்த்தம். 



அருணகிரிநாதர் பதாரவிந்தங்களை பல பாடல்களில் பாடிஉள்ளார்.. 
அவைகளில் தற்போது மனதில் தோன்றும் ஆறு பாடல் வரிகள்..

1) வண்டொன்று கமலத்து மங்கை, கடல் ஆடை மங்கை பதம் வருடவே மதுமலர் கண்துயில் முகுந்தன் மருகன் குகன் 

2) நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே.

3)பூ அடிகள் சேர அன்பு தருவாயே..

4)வெகு மலரது கொடு வேண்டியாகிலும் ஒருமலர் ஒர் இலை யே கொண்டாகிலும் நான் உன்னை நினைந்து விதமுறு பரிவொடு வீழ்ந்து தாழ் தொழ அருள்வாயே.

5) நித்த நின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும் வகை ஓத நினைவாயே சற்பகிரி நாதா..

6) போது கங்கையின் நீர் சொரிந்து இருபாத பங்கயமே வணங்கியே பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே..

முருகா சரணம் 

No comments:

Post a Comment